புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!

புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள்…

புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள் வாயிலாக மலிவு விலையில், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளை பான்லே நிறுவனத்திற்கு வழங்கினார்.

புதுச்சேரியில் உள்ள 70 பான்லே விற்பனையகங்களில் முகக்கவசம் 1 ரூபாய்க்கும், 50 மில்லி கிருமிநாசினி 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் விவேக்கைப் பின்பற்றி இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.