முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

டெல்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அப்பகுதியில் அவர்கள் தங்குவதற்காக குறைந்த செலவில் வீடுகளை கட்டி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களையும் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் போராட்டத்தைத் தொடங்கிய விவகாயிகள், அப்பகுதியிலேயே அவர்களின் டிராக்டர்களிலே தற்காலிக கூடாராங்கள் அமைத்திருந்தனர்.

இந்நிலையில் அறுவடைகாலம் முடிந்துவிட்டதால், விவசாயிகளில் பலர் டிராக்டர்களை மீண்டும் அவர்களின் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ஆகையால் தற்போது டெல்லி எல்லையில் விவசாயிகள் குறைந்த செலவில் தங்கும் வீடுகளை கட்டியுள்ளனர். குறிப்பாக டிக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கல்வீடுகளை கட்டி அதன் மேல் கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வீடுகளை கட்ட ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவிடப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிடுவதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் பிற விவசாயி அமைப்புகளுடன் சேர்ந்து ஆலோசிக்கப்படும் என்று விவசாயி சங்கங்களில் ஒன்றான சம்யுக்தா கிசான் மோர்ச்சா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டாணி வைத்திருந்த பையை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர்

G SaravanaKumar

வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை

Arivazhagan Chinnasamy

டெல்லி உள்பட 19 மாநிலங்களில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik