கோவையில் தடம் புரண்ட சரக்கு ரயில்!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் சிமென்ட் ஆலை பயன்பாட்டிற்கான சரக்கு ரயில், மீண்டும் தடம் புரண்டது. கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமென்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அந்த தொழிற்சாலைக்கு…

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் சிமென்ட் ஆலை பயன்பாட்டிற்கான சரக்கு ரயில், மீண்டும் தடம் புரண்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமென்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அந்த தொழிற்சாலைக்கு காலை சரக்கு ஏற்றி வந்த ரயில், இரண்டு கேட்டுகளை உடைத்துவிட்டு, மயில்சாமி என்பவருக்கு சொந்தமான தோப்பில் தடம்புரண்டது.

கடந்த வாரமும் ரயில் தடம் புரண்ட நிலையில், இன்று மீண்டும் விபத்து ஏற்பட்டிருப்பது அந்தப் பகுதியினர் இடையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தொடர் விபத்துகளை தவிர்க்க, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.