பெண்ணின் நுரையீரலில் இருந்த மூக்குத்தி திருகாணி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

பெண்ணின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை  அறுவை சிகிச்சையை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மேற்கு வங்கத்தை சார்ந்த பெண் வர்ஷா (35) என்பவர் கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. …

பெண்ணின் நுரையீரலில் இருந்து மூக்குத்தி திருகாணியை  அறுவை சிகிச்சையை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

மேற்கு வங்கத்தை சார்ந்த பெண் வர்ஷா (35) என்பவர் கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது.  இதற்கு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் தான் திடீரென,  தொடர்ந்து இருமும்போது சளியில் ரத்தம் வந்ததால்,  உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : “என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!

இந்நிலையில்,  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  மூச்சுக் குழாயில் ஏதோ ஒரு சிறிய பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.  இதையடுத்து, உடனே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அது மூக்குத்தியில் இருக்கும் திருகாணி என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் தனது திருமணத்திற்காக அணிந்த மூக்குத்தியின் திருகாணி இது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன்பின் கடும் முயற்சிக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் மூச்சுக் குழாயிலிருந்து மூக்குத்தியில் இருக்கும் திருகாணியை மருத்துவர்கள் அகற்றினர்.  இது தொடர்பாக மருத்துவர்கள் குழு கூறியதாவது :

இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது.  பொதுவாக, சில நேரங்களில் உலர் பழங்கள் அல்லது சிறிய பொருட்களை நுரையீரல்களுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளோம்.  ஆனால், இந்த சம்பவம் மிகவும் அரிதாக உள்ளது”

இவ்வாறு மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.