மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பேட்டரி வாகனங்களுக்கான 100% வரி விலக்கை, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து மின்சார…

பேட்டரி வாகனங்களுக்கான 100% வரி விலக்கை, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 31.12.2022 வரை 100% விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, பயணிகள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019ன் படி பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கான 100% வரி விலக்கை, 01.01.2023 முதல் 31.12.2026 வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று, பேட்டரியால் இயக்கப்படும் மின்சார வாகனங்களுக்கான 100% வரி விலக்கை, 01.01.2023 முதல் 31.12.2025 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.