மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை தொடர்ந்து விமர்ச்சித்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்து இருப்பதாக ஆ.ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீலகிரி நாடாளுன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இன்று உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மாவட்டத்தில் இது வரை நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, பிரதமர் மோடி நாட்டில் கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் கட்டி உள்ளதாக பெருமையாக கூறுவதாகவும் ஆனால் கட்டபட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்த போதிய தண்ணீர் இல்லை என்றும், மக்களிடையே கழிப்பறையை பயன்டுத்துவ குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் இதனால் 80% கழிவறைகள் பயனற்று இருப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஆ.ராசாவிடம் சிபிஐ புதிதாக 5.53 கோடி சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கேட்ட போது, ஏற்கனவே அமலாக்க துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் 2ஜி வழக்கின் போதே அந்த சொத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதாகவும், தொடர்ந்து மத்திய அரசு மற்றும் அதனுடைய கொள்கைகளை விமர்ச்சித்து வருவதால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அமலாக்கத்துறையை வைத்து புதிதாக சொத்து குவிப்பு தொடர்ந்துள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.







