விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாகத் தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு குடோனில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால், கரும்புகை வெளியேறியது.. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், போலீசார், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்..
இதையடுத்து தீயணைப்பு துறையினர் குடோனில் ஈடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைபோல சிவகாசி அருகே பேர்நாயக்கன்பட்டியில் ஜெய் விநாயகா கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




