சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான…

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது.  இந்த ஆலையில் இன்று திடீரென எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் உள்ள 7 அறைகள் தரைமட்டமாகின.

மேலும் விபத்தின் போது ஆலையில் உள்ளே இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ர் படுகாயமடைந்தனர்.  இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.