குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு: அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம்

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி அனுமதி கோரியுள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக…

கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடையும் வரை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி அனுமதி கோரியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நடத்தி வந்தது. இதில் நிதிசார் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சோனியாவுக்கும், ராகுலுக்கும் அமலாக்கத் துறை விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பியது.

இதை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 5 நாள்களாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், சோனியா திடீரென கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை.

ராகுல் காந்தி

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். அவரை ஜூன் 23ம் தேதி ஆஜராகுமாறு விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சூழ்நிலையில், தான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை; எனவே நான் பூரண குணமடையும் வரை அடுத்த சில வாரங்களுக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளார்.

இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானபோது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.