நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிடம் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் அமலாக்கத்துறையின் விசாரணையை கண்டித்து போராட்டங்களும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களிடம், தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அவசர அழைப்பில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை இருவரும் நாளை டெல்லி செல்கின்றனர்.
ஒரு வாரம் தொடர்ந்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து இருவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
– இரா.நம்பிராஜன்







