தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக “DPHICON 2022” மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்து, மாரத்தானில் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு பகுதியில் மாபெரும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் விலக்கு அளிக்கப்படும். திமுக இளைஞரணி செயலாளர், எம்எல்ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த பிறந்தநாள் அமைச்சராக உதயநிதி கொண்டாடினால் நல்லது. அமைச்சர் ஆக அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம் வலுவாக இருக்க 30 லட்சம் இளைஞர்கள் உழைக்கின்ற அமைப்பு இளைஞரணி அமைப்பு. திமுக இளைஞர் அணி அமைப்பு பிற கட்சிகள் போல சம்பிரதாயத்திற்கு இருக்கும் அமைப்பு அல்ல சமுதாயத்திற்காக உழைக்கும் அமைப்பாகும். சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா பூஜ்ஜிய நிலையை நோக்கியே செல்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.