ஆந்திராவில் நிலத் தகராறு காரணமாக வெடித்த மோதலில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான சாம்பசிவராவ். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா, பாலகிருஷ்ணா ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக அந்த ஊரில் நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்தில் இரு தரப்பினரையும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதை பொருட்படுத்தாத சாம்பசிவ ராவ் தொடர்ந்து சிவா, பாலகிருஷ்ணாவுடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து சிவா, பாலகிருஷ்ணா மற்றும் அவர்களின் உறவினர் ஆஞ்சநேயலு ஆகிய மூவரையும் சுட்டுள்ளார். இதில் சிவா, பாலகிருஷ்ணா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஞ்சநேயலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாம்பசிவராவை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.







