பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தானில் பேரணி நடத்தி வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும்…

பாகிஸ்தானில் பேரணி நடத்தி வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், கடந்த மாதம் பதவி இழந்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி இழக்கச் செய்தன. இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகபெரும் பேரணியை தொடங்கி, நவம்பர் 4ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது.

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரணியின் போது இம்ரான் கானின் கன்டெய்னர் அருகே வசிராபாத்தில் உள்ள ஜாபர் அலி கான் சவுக் அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கானின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,  காயம் அடைந்த இம்ரான்கானை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். இந்த துப்பாக்கிசூட்டில் அவருடன் மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், ஏகே47 ரக துப்பாக்கிகள் கொண்டு சுடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.