நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதனை தொடரந்து கிராம மக்களை சந்தித்து வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் ஊராட்சிமன்ற தலைவர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரியாணியை கிராம மக்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து கிராம மக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்தி கொண்டு பிரியாணி வாங்கி சுவையை ருசித்து மகிழ்ந்தனர். வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி ஊருக்கு பிரியாணி போட்டு அசத்தியது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- பி.ஜேம்ஸ் லிசா







