ஓ.பி.எஸ். அதிமுகவின் உண்மையான தொண்டனா? – தங்கமணி

தலைமைக் கழகத்தை இடித்து உள்ளே செல்லும் ஓ.பி.எஸ் அதிமுகவின் உண்மையான தொண்டனா என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என…

தலைமைக் கழகத்தை இடித்து உள்ளே செல்லும் ஓ.பி.எஸ் அதிமுகவின் உண்மையான தொண்டனா என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி பேசுகையில், எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என சொல்லி எம்.ஜி.ஆர் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாக திறமையோடு செயல்படுபவர் எடப்பாடி பழனிசாமி. ஏழையாக, எளிய மக்களின் தொண்டனாக இருப்பவர். திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் வலிமை மிக்க தலைவர் வேண்டும் அது எடப்பாடியார் தான். திமுகவை எதிர்க்கும் தமிழகத்தின் ஒரே தலைவர் என்பதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என அதிமுகவில் இருந்தவர்கள் சிலர் கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றனர். தலைமைக் கழகத்தை இடித்து உள்ளே செல்கிறார் என்றால் ஓ.பி.எஸ் அதிமுகவின் உண்மையான தொண்டனா?. ஓபிஎஸ் இந்த கட்சிக்குத் தேவையா என அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் யோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.