29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுடுகாட்டு கூரை முறைகேடு; முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : பழனியில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்! – கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சுடுகாட்டு கொட்டகை முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்திக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 2014 சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனைவால் செல்வகணபதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading