பழனியில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்! – கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி மலைக் கோயிலில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,  பழனி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன்…

பழனி மலைக் கோயிலில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

இதையும் படியுங்கள் : மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

மேலும்,  பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப் கார்,  மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன.  இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.  அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.

அதன்படி, பராமரிப்புப் பணி காரணமாக நாளை (நவ.29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை, யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.