ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!
ஜோலார்பேட்டையில் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் விமர்சித்தார். திருப்பத்துார் மாவட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்துார் பகுதியில் நாட்றம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு…
திருப்பத்துார் மாவட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்துார் பகுதியில் நாட்றம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சார்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சர் தொகுதியாக இருந்தது, ஆனால் எனக்கு முன்னாள் இருந்த அமைச்சர் இது போன்ற சிறு சிறு வேலைகள் கூட பொதுமக்களுக்கு செய்யவில்லை என ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் குற்றம்சாட்டினார். புதிதாக கட்டபட்ட நியாயவிலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
-அனகா காளமேகன்






