முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவினரின் தேர்தல் பணிகளை தடுக்கவே ரெய்டு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்கிட திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி  ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமாக சென்னை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை பணி செய்ய விடாமல் தடுக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர், இதனையெல்லாம் அதிமுக எதிர்கொள்ளும், நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்போம். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிமுக பயப்படாது” என்று தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அதனை திசை திருப்ப திமுக இதுபோன்ற பொய்யான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சி அமைத்தது முதல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.

மேலும், காவல்துறையை வைத்து அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்திவிடலாம் என்று நினைக்கலாம். அது ஒரு போதும் நடக்காது என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் விரைவில் 13வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்; பாஜக நம்பிக்கை

Jayasheeba

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

G SaravanaKumar

கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

G SaravanaKumar