“மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டமாக இணைய வழி சுய கணக்கெடுப்பு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகியது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய உட்பட ஏராளமான பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இணையவழியில் சுயப்பதிவு செய்வதற்கு இன்றே (ஜுலை 31) கடைசி நாளாகும்.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இணைய வழியில் தனது விவரங்களை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (ஆகஸ்ட் 1) முதல் 30- ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.