தமிழ் யூடியுப் உலகில் தனது தனிப்பட்ட இயல்பான காமெடிகள் மூலம் அதிக ரசிகர்களை கொண்டவர் ‘வி.ஜே.சித்து’. மிகவும் பிரபலமான அதிக சப்ஸ்க்ரைபர்களை கொண்ட வி.ஜே.சித்து தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கி வரும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சித்து இயக்கத்தில் உருவாகி வரும் டயங்கரம் திரைப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டர்நேஷ்னல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் வி.ஜே சித்து ஹீரோவாக நடிக்க நடராஜன், ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதி சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காமெடி , எமோஷன் கலந்து உருவாகியுள்ள இப்படத்தின் படபிடிப்பு நிரைவடைந்துள்ளது. இதனை ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




