மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 24ம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் விவரத்தை அதிமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின் விவரத்தை அதிமுகவின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24.9.2026 முதல் 3.10.2026 வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதி: 24.9.2026, 25.9.2026, 3.10.2026

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி : 27.9.2026, 28.9.2026, 2.10.2026

கழகப் பொதுச் செயலாளர்’ சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.