முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்

தேனி அருகே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

 

தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என
சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே, அந்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்? அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினர்..

 

மேலும் தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார்பதிவாளர் மீது வழக்கு
பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் முறைகேடாக பத்திர பதிவு செய்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் (IG) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (செப். 22) ஒத்தி வைத்தனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

Web Editor

100 நாள் வேலை திடத்தில் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குக – பிரதமருக்கு சிபிஎம் வலியுறுத்தல்

Halley Karthik

பசியுடனே உயிரிழந்த மது!: நினைவிருக்கிறதா?

Halley Karthik