முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

டி20 தொடர் ; இந்தியா – ஆஸ்திரேலியா அணி மோதல்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 தொடர் மொகாலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ஞ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உள்ள கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 க்கு போட்டி தொடங்குகிறது. இதனையடுத்து இரு அணியினரும் தீவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இந்த தொடரில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி முழுமையாக தயார் படுத்தி வருகிறது. அடுத்த மாதம் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக தயார் படுத்தி கொள்ள வேண்டுய கட்டாயத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான அணி களமிறங்குகிறது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (WK), தினேஷ் கார்த்திக் (wk), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அ. மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்

Halley Karthik

‘ஒன்றிய’ வரிகளை வெட்டியெடுத்த விக்ரம் படக்குழு!

Vel Prasanth

2 நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு…. வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி!

Nandhakumar