“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது!” – உதயநிதி ஸ்டாலின்

“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்தக் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “நாம் மட்டும் இல்லை, தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு வந்தது, தமிழ்நாடு மட்டுமல்ல, இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற இந்த சர்க்கஸ் கூட்டமே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்கிறர்கள். அந்த முடிவை நாம் ஏற்றுக்கிட்டுத்தான் ஆக வேண்டும்.

நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது, சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைது என ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது.” காலை தூங்கி எந்திரித்தால் யாரை கைது செய்யலாம் என அட்டவணை போட்டு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தஞ்சாவூரில் விவசாய விரோத தவெக அரசை கண்டித்து, திமுக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்ய முயற்சித்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினேன் யோசித்தேன், “டம்மி முதலமைச்சர் எனக் கூறினேன் அதை ஒப்புக்கொண்டார்கள். கேடுகெட்ட, வெட்கங்கெட்ட அரசு எனக்கூறினேன். இதற்கெல்லாம் எந்த ரியாக்சனும் இல்லை. ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதால் நடவடிக்கை.”

யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் தெரியவில்லை. டம்மி முதலமைச்சருக்கே எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் யார் எனத் தெரியாது.

சட்டமன்றத்தில் ஒரு துறைப்பற்றி கேள்வி கேட்டால், மற்றொரு அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசுகின்றனர். ”நாம் ஒரு கேள்வி கேட்டால், நம்மை அசரவைக்கும்படி ஒரு பதில் சொல்வார்கள்” என்ற நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. அங்கு இருக்கும் முதலமைச்சருக்குக் கூட அமைச்சர்கள் யார், சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியாது. அப்படித்தான் பேரவை நடந்துகொண்டிருக்கிறது.

நான் தஞ்சாவூருக்கு ஜாலியா பேசிட்டு, ட்ரிப் போன மாதிரிதான் போனேன். என்னை கைது செய்த இந்த அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏன் என்றால், தேர்தலுக்குப் பிறகு சோர்ந்து போயிருந்த கட்சித் தொண்டர்கள் பழைய ஃபார்முக்கு வந்திருகிறார்கள். தோல்விக்குப் பிறகு யாரை எழுப்பிவிடுறார்களோ இல்லையோ, Gen Z தலைமுறையை இந்த அரசு எழுப்பிவிடுகிறார்கள்.

தவெக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. இனி போகப் போக ஒவ்வொரு அமைச்சர்களும் நிச்சயமாக பெரிதாக சிக்க போகிறார்கள். இன்றைக்கு நாம் தொடர்ந்து பெயில் வாங்கிக் கொண்டிருக்கிறோம், அந்த கும்பலை பெயில் வாங்கும் நிலைமைக்கு பணி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.