தப்பு பண்ணாகூட விட்ருவேன்,படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் – நூதன முறையில் கல்வி விழிப்புணர்வு செய்த சப் இன்ஸ்பெக்டர்

தப்பு பண்ணாகூட விட்ருவேன், ஆனால் படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் என நூதன முறையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்வி என்பது மனித வாழ்வில்…

தப்பு பண்ணாகூட விட்ருவேன், ஆனால் படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் என நூதன முறையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்வி என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. கல்வி கற்பது அடிப்படை உரிமையாகும். எந்த பிடிமானமும் இல்லாமல் கல்வியை மட்டுமே உறுதியாக பிடித்து வென்று காட்டிய கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளது. கல்வியை பற்றி ஔவையாரின் மொழியில் சொல்வதனால்..

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆக கற்றோருக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அறியாமை என்னும் இருளை நீக்கி பகுத்தறிவு சுடரை ஏற்றியது கல்வி மட்டுமே. எனவே தான் தமிழ்நாட்டை ஆண்ட தலைவர்கள் சத்துணவு, புத்தகங்கள், சீறுடை, மிதி வண்டி , மடிக்கணினி என விலையில்லமல் அனைத்தையும் வழங்கி கல்வியை கற்க சொன்னதன் விளைவு இந்தியாவின் கல்வி விகிதத்தை விட தமிழ்நாட்டின் கல்வி விகிதம் அதிகமானதற்கான காரணம்.

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.

அவர் அந்த வீடியோவில் “ நான் தவறு செய்தால் கூட விட்டு விடுவேன். ஆனால்  படிக்காமல் இருந்தால் விடமாட்டேன். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என பேசியுள்ளார்.  அப்பகுதியில் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறி  நூதனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட  போலீசாரின் பெண்ணா லூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பரமசிவனாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.