நீட் தேர்வு தாக்கம்: நாளை ஆலோசிக்கும் ஏ.கே.ராஜன் குழு!

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

குழுவில் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நாளை பகல் 12 மணிக்கு முதன்முறையாக கூடி ஆலோசனை நடத்துகிறது இந்தக் குழு.

அதில், உறுப்பினர்கள் ரவீந்திரநாத், உயர்கல்வித் துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நீட் தேர்வினால் பின்தங்கிய மாணவர்கள் நலன் காக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.