ராணுவ விமானத்தில் விபத்து: பயணித்த 85 பேர் நிலை என்ன?

பிலிபைன்ஸில் 85 பேர் பயணித்த ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். தென் பிலிபைன்ஸில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் செல்வதற்காக சுமார் 85…

பிலிபைன்ஸில் 85 பேர் பயணித்த ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தென் பிலிபைன்ஸில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் செல்வதற்காக சுமார் 85 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட C-130 ரக ராணுவ விமானம் கீழே விழுத்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானத்திலிருந்து இதுவரை 15 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களை காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விமானத்தில் பெரும்பாலானோர் அந்நாட்டு டாஸ்க் போர்ஸில் இணைவதற்காக ராணுவ பயிற்சிகளை முடித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.