தேனி 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் – 9 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்!

தேனியில் 17 சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் 9 சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, மறைந்திருந்த கைதிகள் திடீரென காவலர்களை தாக்கிவிட்டு லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 சிறை கைதிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தப்பியோடிய சிறைக்கைதிகளை போலீசார் 17 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதுவரை 4 கைதிகள் பிடிபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்களின் உதவி கொண்டு அருகாமையில் உள்ள காடுகளில் தேடி வருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்துயுள்ள நிலையில் தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

தப்பியோடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படைகளின் எண்ணிக்கை 25-ஆம் உயர்ந்துள்ள நிலையில் சிறைத்துறை டிஜிபி, தேனி மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சிரையில் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்ட்.

இந்த நிலையில் 17 சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் 9 சிறைக்காவலர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.