#Erode | 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்… தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளி கைது!

ஈரோட்டில் 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி…

ஈரோட்டில் 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்
சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்
ஈடுபட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : #Erode | “அவசரப்பட்டியே குமாரு”… மூதாட்டியிடம் செயின் பறித்த கும்பல் – கடைசியில் நடந்த டுவிஸ்ட்!

இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த
கூலித் தொழிலாளர் சுப்பிரமணி தலைமறைவானார்.

போலீசார் சுப்பிரமணியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு மாதம் காலமாக தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளி சுப்பிரமணியத்தை ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.