ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று தொடங்கியது .
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற
உள்ளது .தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, ஏற்கனவே இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் 58 பேர் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு 12 B விண்ணப்பம் அளித்து இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனையடுத்து இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை வரை நடைபெறும் இந்த தபால் வாக்குகள் பெறப்பட்டு பினனர் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படும் .
முன்னதாக முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி 18 மாற்று 19 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 80 வயதுக்கு மேற்பட்ட 346 பேர் தபால் வாக்குகள் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா