முக்கியச் செய்திகள் குற்றம் Instagram News

பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் பட்டா கத்தியுடன் கொள்ளையடிக்க வந்த
கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் அலாரம் சத்ததை கேட்டு அலறியடித்து ஓடிய
சம்பவம் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் கிதியோன் என்பவருக்கு சொந்தமான
அடுக்குமாடி வீடு உள்ளது. கிதியோன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்
பணியாற்றி வருவதால் கந்திகுப்பத்தில் உள்ள வீட்டை கடந்த ஆறு மாதமாக பூட்டி
வைத்து விட்டு ஓசூர் பகுதியில் வசித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


கந்திகுப்பம் பகுதியில் உள்ள வீட்டில் யாரும் வசிக்காத காரணத்தால் வீட்டின்
பாதுகாப்பு கருதி அலாரம் சத்தத்துடன் கூடிய சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ள
கிதியோன் ஓசூரில் இருந்து இந்த வீட்டை கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக கந்திகுப்பத்தில் உள்ள வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் நேற்று இரவு பட்டாக்கத்தியுடன் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்பொழுது கண்காணிப்பு கேமராவை கடந்து செல்லும் பொழுது திடீரென வீட்டில் அலாரம் சத்தம் ஒலித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தபித்தோம், பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தனர்.


இந்த சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர் வீட்டில் அலாரம்
சத்தத்துடன் சிசிடிவி கேமரா பொருத்திய கிதியோன் செயலை பாராட்டியுள்ளனர்.
மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தினால் இது
போன்று கொள்ளை சம்பவங்கள் தவிர்க்கப்படும் எனவும், தற்பொழுது நடந்த சம்பவம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சீமானுடன் இணையும் தமிழக வாழ்வுரிமை? – வேல்முருகன் விளக்கம்

Dinesh A

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

Web Editor

ஹைதராபாத்தில் காதல் திருமணம் செய்தவர் குத்திக் கொலை

Halley Karthik