ஈரோட்டில் கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணியின் தேர்தல் பணிமனையில் பாஜக கொடி இடம்பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார். ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே அதிமுகவில் உள்ள இரு அணிகளை இணைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. நேற்று அவசர பயணமாக தமிழக பாஜக தலைவர் டெல்லி சென்றார். டெல்லியில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்தார்.
அதேபோல இன்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் பாஜக வின் தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஓ. பன்னீர்செல்வததை சந்தித்தனர்.
இதன்பிறகு பேசிய செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் உறுதியான, ஒரு சக்தியான ஒரு வேட்பாளர் தேவை. அதற்கு தேவை தனி தனியாக பிரிந்து இருக்கும் இரண்டு பேரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி படம் மற்றும் பாஜக கொடியும் இடம்பெற்றுள்ளன. நேற்று இபிஎஸ் தரப்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் முதலில் ‘ தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று எழுதப்பட்டு பாஜக தலைவர்கள் படம் இல்லாமல் பேனர் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்பு அந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.