தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் – மதுரை மேயர் அறிவுறுத்தல்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என மதுரை மேயர் அறிவுறுத்தி உள்ளார்.   மதுரையில் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என மதுரை மேயர் அறிவுறுத்தி உள்ளார்.

 

மதுரையில் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், தூய்மை பணியின்போது துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். இது சர்ச்சைக்குள்ளான நிலையில், நியூஸ் 7 தமிழ் சார்பிலும் செய்தி வெளியிடப்பட்டது.

 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

 

மண்டலம் 3 வார்டு 59 ரயில்வே காலனி பகுதியில் சிறப்பு தூய்மைப் பணியை துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்ட போது இயந்திரத்தை இயக்கும் தூய்மைப் பணியாளர்கள் காலனி பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருப்பதை கவனித்து அவரிடம் பாதுகாப்புகளுடன் பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

இதை உடனடியாக விசாரித்து பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததற்கான தக்க விளக்கத்தை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

அனைத்து தூய்மை பணியாளர்களும் தகுந்த உபகரணங்கள் அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

 

மண்டல உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் வார்டு உதவி பொறியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் இதை பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்திட வேண்டும்.

 

மீண்டும் இவ்வாறான கவனக்குறைவான செயல் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.