மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில், எம்எல்ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டு, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுகவினர் ஓபிஎஸ்- இபிஎஸ் முன்னிலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.







