முக்கியச் செய்திகள் சினிமா

உலகளவில் 254 மில்லியன் மக்களை கவர்ந்த “எஞ்சாயி எஞ்சாமி”!

திரைப்படங்களில், கதைகளுக்கிடையே வரும் பாடல்கள்தான் இதுவரை டாப் டிரெண்டிங்கில் இருந்திருக்கின்றன.இந்த கட்டமைப்பினை உடைத்து தனிநபர்களின் கூட்டு முயற்சியால் புத்துணர்ச்சிபெற்று, புது டிரெண்டை கொண்டு வந்திருக்கிறது இந்த என்ஜாயி எஞ்சாமி பாடல்.

இந்த பாடலுக்கு உலகமக்களிடையே ஏன் இத்தனை தனி கவனம்? என்றால், வரிகளோடு இணைந்த உழைக்கும் மக்களின் வாழ்வியலே. “வேர்வ தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா” எனும் வரிகளே, உழைக்கும் மக்களின் இன்றைய எனர்ஜி டானிக். பாடலை காட்சிப்படுத்திய விதமும் இயற்கையோடு ஒன்றிபோயே இருந்தது.

இதிலிருக்கும் மாபெரும் ப்ளஸ், பாடல் காட்சிகளை உருவாக்க, திரைப்படங்களை போன்ற பிரம்மாண்ட செலவு செய்ய அவசியமிருக்காது. எவ்வித நெருக்கடியுமின்றி, தனி நபர்களே பாடல் காட்சிகள் உருவாக ஆகும் செலவை, கணிசமாக குறைத்து, சரியான திட்டமிடலுடன் கட்டமைக்க முடியும்.

பாடல்களில் பிரம்மாண்டங்களே பிரதானம் எனும், கட்டமைப்பு உடைக்கப்பட்டு, புது கலாச்சாரமே உருவாகிறது.இது போன்ற பாடல்களின் வெற்றி, சர்வதேச அளவில் தனிநபர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதுடன், திறமைகள் தானாக வெளிப்படுகின்றன.

இதற்கான முயற்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கியதுதான் மாஜா எனும் யூடியூப் சேனல்.
3 மாதங்களுக்கு முன் INDEPENDENT ARTISTS களை அடையாளம் காண தொடங்கப்பட்ட இந்த சேனலில், முதலில் பதிவேற்றப்பட்ட என்ஜாயி எஞ்சாமிபாடல், சர்வதேச அளவில் 254 மில்லியன் மக்களை ஈர்த்துள்ளது.

இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அவரது மகள் dhee, தெருக்குறள் அறிவு ஆகியோர் பாடலை பாடியிருந்தனர்.பாடலின் வரிகளும் அறிவு செதுக்கியதே. இப்பாடலுக்கான காட்சி அமைப்பை உருவாக்கியிருந்தார் அமித் கிருஷ்ணன்.

தொடக்கத்தில் இப்பாடலை ரசித்தவர்கள், முதல் வார்த்தையான எஞ்சாயி எஞ்சாமியை மட்டும் வைத்து, துள்ளலான பாடல் என நினைத்து இன்ஸ்டாகிராமில், ரீல்ஸ் செய்ய தொடங்கி விட்டனர். இதனாலேயே, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு டிரெண்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்திருந்தது.

ஆனால், இப்பாடலை காட்சிப்படுத்திய விதத்திலும், வரிகளிலும் இருந்ததோ, வேதனையும், வேர்வை சிந்தும் மக்களின் வாழ்வியலுமே.தொடக்கத்தில் குக்கூ,குக்கூ என தொடங்கி, அடுத்த சில வரிகள் குழந்தைகளை கவரும் வண்ணம், மழலை பிதற்றலை போல கோர்வையாக வருகிறது. வரும் வரிகள் அனைத்தும் சமூக வேற்றுமைகளை கலைந்து, ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இந்த பாடல் இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொழிகளை கடந்து, புரிதலை கடந்து, உலக மக்களால் ரசிக்கப்பட்டு, தற்போது இந்த பாடல் யூடியூபில், 254 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

பாடல் வெளியாகி 3 மாதங்களாகியும், பலரையும் ஹெட்ஃபோனில், ரிப்பீட் மோடில் போட்டு ரசிக்க வைக்கிறது என்ஜாயி எஞ்சாமி. திரைப்படங்களை தாண்டி, தனிநபர்களின் நல்ல படைப்புகளுக்கு மொழி, கலாச்சாரத்தை கடந்து, உலக மக்களிடையே என்றும் வரவேற்பு உண்டு என்பதற்கு, என்ஜாயி எஞ்சாமியே சான்று.

Advertisement:

Related posts

முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்? 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் 2 கோரிக்கைகளில் உடன்பாடு!

Saravana

சமூக வலைத்தளங்களில் பரவும் விசிகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

Halley karthi

பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Jeba Arul Robinson