கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா

கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட அதிகரித்துள்ளது. இதுபற்றி…

கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட அதிகரித்துள்ளது. இதுபற்றி கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரே நாளில் 9361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 9401 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,88,629 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 80,892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,765 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பைக் கண்டறிவதற்காக, கடந்த 24 மணி நேரத்தில் 80,393 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.