முக்கியச் செய்திகள் இந்தியா

மதமாற்றம் செய்வதற்கு வெளிநாட்டு நிதி: அமலாக்கப்பிரிவு தகவல்


டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஆறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் கூட்டாக மதமாற்றம் செய்வதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் வெளிநாட்டு நிதி உபயோகப்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மதமாற்றம் செய்வதற்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து டெல்லியில் மூன்று இடங்கள், உபியில் மூன்று இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி ஜாமியா நகரில் உள்ள முகமது உமர் கவுதம் மற்றும் அவரது ஆதரவாளர் குவாஷி ஜஹாங்கீர் ஆகியோரின் இஸ்லாமிக் தாவாக் மையத்தின் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அல் ஹாசன் கல்வி மற்றும்நல அறகட்டளை, கல்வி வழிகாட்டி மற்றும் நல சொசைட்டி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உமர் கவுதம் என்பவருக்குச் சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள அமைப்புகள் பெரும் அளவில் மதமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சட்டவிரோத மதமாற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தொடர்புடைய அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து நிதி பல கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கிடைத்துள்ளது.”
இவ்வாறு அமலாக்கத்துறை கூறியுள்ளது.

உமர் கவுதமால் நடத்தப்படும் அமைப்புகள், சட்டவிரோத மதமாற்றம் செய்வதற்கான கருவியாக செயல்பட்டன. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அந்த அமைப்புகள் மீது உத்தரபிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை வழக்கு பதிவு செய்யது. உமர் கவுதம் மற்றும் அவரது ஆதரவாளரை உபி தீவிரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

Mohan Dass

டிக்டாக் செயலி: ட்ரம்ப்பின் முடிவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!

Jayapriya

பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

Halley Karthik