இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில், 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வார்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. மழையால் போட்டி தாமதமாகத் தொடங்கியது. தாமதம் காரணமாக 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. லாரன் வின்ஃபீல்ட் 36 ரன்களிலும் கேப்டன் ஹீதர் நைட் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஆறுதல் வெற்றி பெறுமா என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.







