எதிர்க்கட்சினை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனைகள்- கே.எஸ்.அழகிரி

மத்தியில் ஆளும் பாஜகவின் 7 ஆண்டு ஆட்சியில் 3000 அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனை என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த பாரதத்தை வலியுறுத்தி காங்கிரஸ்…

மத்தியில் ஆளும் பாஜகவின் 7 ஆண்டு ஆட்சியில் 3000 அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனை என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த பாரதத்தை வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணத்தை துவக்குகிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திக் விஜய் சிங், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் எம்பி
எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், பாரதத்தை ஒன்றிணைக்க கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடை பயணம் சீனாவின் கம்யூனிஸ புரட்சியாளர் சென்ற நடை பயணத்திற்கு இணையானது.

மத்திய அரசின் கடந்த ஏழு ஆண்டு ஆட்சியில் 3000 மேற்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் நடந்துள்ளன இதில் ஒரு சதவீதம் கூட யாரும் தண்டிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை மிரட்டவும், முதலாளிகளை, பத்திரிகையாளர்களை விரட்டவும் மத்திய அரசு அமலாக்க துறையை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதேபோன்று மேற்கு வங்காளத்தில் மம்தாபானத்தின் உதவியாளரை கைது செய்தனர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனைகளை நடத்தி அரசை கவிழ்த்தனர்.

பீகாரில் மட்டும் மோடியின் திட்டம் எடுபடவில்லை காரணம். கௌடிலியரின் அர்த்தசாஸ்திரத்தை மோடி பாதி தான் படித்துள்ளார். ஆனால் நிதிஷ்குமார் முழுமையாக படித்ததால் மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை குறைகளை சொன்னால் அதனை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிவர்த்தி செய்கிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை நியாயப்படுத்தியது இல்லை. ஸ்டெர்லைட் பிரச்சனைகள் அதிமுக அரசு நியாயப்படுத்தியது. ஆனால் கள்ளக்குறிச்சி பிரச்சனையில் உடனடியாக முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனையை கூறியவுடன் முதல்வர் நடவடிக்கை எடுத்தது இதற்கு சான்று என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.