பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள…

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொதுத் துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விளம்பர எண்-BSL/R/2022-01, பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். Attendent-Cum Technician Trainee (NAC) பணி. 146 காலியிடங்கள் உள்ளன.

பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாதம் ரூ. 16,100 உதவித்தொகை வழங்கப்படும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

http://www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.