ChatGPT குறித்து ட்வீட் செய்த எலான் மஸ்க்!

சாட் ஜிபிடி-4 பார் தேர்வில் 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு…

சாட் ஜிபிடி-4 பார் தேர்வில் 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வந்ததிலிருந்து தினமும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தவகையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் சாட்ஜிபிடி குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், தற்போது OpenAI நிறுவனம் ChatGPT-4 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் செயல்திறன் மிகவும் அதிகமாகும். முன்பு உள்ள GPT-3.5 பார் (வழக்கறிஞர் தேர்வு) தேர்வில் 10% மதிப்பெண்களையே பெற்றது. ஆனால் ChatGPT-4 90% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. மேலும், மனிதர்களாகிய நாம் நியூராலிங்குடன் முன்னேறுவது நல்லது என குறிபிட்டுள்ளார்.

உலகின் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த சாட் GPT, குறைந்த கால அளவிலேயே பிரபலமாகி விட்டது. உலகில் உள்ள அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இந்த சாட் GPT, உலகெங்கிலும் உள்ள மிகவும் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது. ஆனால் இந்தியாவில் நடத்தப்படும யுபிஎஸ்சி தேர்வில் இது தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.