செய்திகள்

டிரம்ப் மீதான ட்விட்டர் தடை திரும்பப் பெறப்படும்: எலான் மஸ்க் அதிரடி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான ட்விட்டர் தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் 3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். கடந்த சில மாதங்களாப் பல்வேறு கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வரும் எலான் மஸ்க், தற்போது வெளியிட்டுள்ள பதிவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் தடையை திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய ட்விட்டர் கணக்கு உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முடக்கப்பட்ட டிரம்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் டிரம்ப்பால் ட்விட்டரை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் மீதனா ட் விட்டரின் தடை திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார். மேலும், ட்விட்டரில் இருந்து ட்ரம்ப் தடை செய்யப்பட்டது அதிபரின் குரலை மெளனமாக்கவில்லை. மாறாக வலதுசாரிகள் மற்றும் மக்கள் மத்தியில் அவரது கருத்து சொல்லும் வேகத்தைப் பெருக்கியுள்ளது.

டிரம்பின் மீதான ட்விட்டர் தடை தார்மீக ரீதியாக மிகவும் தவறானது மற்றும் முட்டாள்தனமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Halley Karthik

ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் – குஷ்பு வாக்குறுதி

Gayathri Venkatesan

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா: 200-க்கும் குறைவான பிரமுகர்களை அழைக்கத் திட்டம்!

Halley Karthik