உலக பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். இவர் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய ட்வீட்களை போட்டு கவனத்தை ஈர்ப்பவரான எலான் மஸ்க், இன்றும் அதுபோல் ஒரு டிவிட்டர் பதிவின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மர்மமான முறையில் நான் உயிரிழந்தால், அதனை நீங்கள் அறிந்து கொள்ள நேரும்போது சுவாரஸ்யமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஏன் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று புரியாமல் பலரும் குழம்பிப்போய் உள்ளனர்.
சிலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.
உலகிற்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள் என்றும், எனவே, உங்களுக்கு எதுவும் நேராது என்றும் பலர் தங்கள் பதிவில் தெரிவித்துள்ளனர்.
வேறுசிலரோ, உங்களுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.
எந்த விலை கொடுத்தேனும் உங்களை காப்போம் என்றும், எனவே, நீங்கள் கவலைப் படாதீர்கள் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
சிலரது பதிவுகளுக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயல்வது எலான் மஸ்க்-கிற்கு வாடிக்கை. அவரது ட்வீட்டுக்கு வந்துள்ள பதிவுகளைப் பார்க்கும்போது, இம்முறை இதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
Advertisement: