முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் சினிமா

சிவகார்த்திகேயனுடன் ஏன் காய் விட்டார் அருண் விஜய்?


வேல் பிரசாந்த்

கட்டுரையாளர்

உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாள் விழா ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டு பேசும்போது “எங்களுடைய ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்குறவங்க நாங்க தனியா என்ன பேசிக்குறோம்னு கேட்டா வியந்துபோவாங்க. இருந்தும் நாங்க அப்படியே விட்டு வச்சிருக்கோம். ஏன்னா கால்பந்தாட்டத்துல ரெண்டு கோல் போஸ்ட் இருந்தாதான் ‘மேட்ச்’ சுவாரஸியமா இருக்கும். இதுக்கு நடுவுல இந்த ஆளு(ரஜினியை பார்த்து) வந்து எனக்கு போதுங்க!, நான் சினிமா விட்டே போகப்போறேன்னு சொன்னாரு.. அப்படியெல்லாம் பண்ணிங்கன்னா நடக்குறதே வேற என கோவமா சொல்லிட்டேன். ஏன்னா நீங்க போனா என்னையும் போக சொல்லுவாங்கய்யா! நம்மல கொளு பொம்மை மாதிரிவச்சி ரெண்டு ரசிகர்களும் விளையாடிக்கிட்டு இருக்காங்க. நாமளும் அதை அனுபவிச்சிட்டு போவோமே.. நீங்க வெளிய போய் என் வாழ்க்கைய கெடுக்காதீங்க. உங்க வெற்றிபடங்கள்ல எனக்கும் பங்கு இருக்கு..so இருந்து நடிச்சிட்டு போங்கன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்” என்று குறிப்பிட்டார்.

 

டங்காமாறி ஊதாரி பாடலில், ‘opponent-இல் ஆளே இல்ல solo-வாயிட்டேன்’ என தனுஷ் பாடுவது போல் வரிகள் வரும். சிம்பு ஷூட்டிங்கிற்கு முறையாக வராமல் வீட்டிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்த தொடங்கியதாக கூறப்பட்ட காலகட்டம் அது. சிம்புவின் இருப்பை அவரின் ரசிகர்களைவிட தனுஷும் அவரின் ரசிகர்களும் தான் அதிகம் ‘மிஸ்’ செய்திருக்க வேண்டும். சிம்புவின் படங்கள் குறைய குறைய இயல்பாகவே தனுஷுக்கான மாஸும் லேசாக ஆட்டம் கண்டது. இன்னொருபுறம் சிம்புவின் படங்கள் வராமல் போனால் கூட தனுஷ் படங்கள் வெளிவந்துகொண்டே இருந்ததால் தொடர்ந்து சிம்பு ரசிகர்களை அது சமூக வலைதளங்களில் இயங்க வைத்துக்கொண்டே இருந்தது.

மேடையில் ஒன்றில் நடிகர் தனுஷை அருகில் வைத்துக்கொண்டு சிம்பு ஒன்றை குறிப்பிட்டிருப்பார். “ என்ன சார், இவ்ளோ நாள் கேப் உட்டீங்கன்னு கேப்பாங்க. ஆனா தனுஷ் கரெக்டா படம் நடிச்சிட்டு இருந்தாரு, அதுனால எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆக, தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக கோலோச்ச வேண்டும் என்றால், தனுக்கு Opponent-இல் ஒரு போட்டி நடிகர் இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் இயங்கியல் விதி . நடிகர்கள் இதை திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும் காலமோ அல்லது ரசிகர்களோ  ஏதேனும் ஒரு புள்ளியில் இருவரையும் கோர்த்துவிட்டு கபடி ஆட தொடங்கிவிடுவார்கள்.

அந்தவகையில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய்- அஜித், தனுஷ் – சிம்பு வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிரெதிர் துருவத்தில் நிறுத்தி ரசிக்க தொடங்கிய ஜோடி சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி. இருவருமே தங்களுடைய கதாநாயகன் அவதாரத்தை ஓரே நேரத்தில் வெவ்வேறு ரூட்டுகளில் எடுக்கத்தொடங்கினர். இது ஒரு ஆரோக்யமான Rival ஆக இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே நல்லதுதானே என எண்ணி இந்த போட்டியை ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனும் விரும்பியதாகவே கூறப்பட்டது. ஆனால் எதை ஒன்றையுமே தலைகிழாக புறட்டி தன்னுடைய ஏழாவது அறிவால் அலசி ஆராய்ந்து பார்க்கும் விஜய் சேதுபதியோ..! ‘ச்சே அப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்ல. எனக்கு அதுல சுத்தமா உடன்பாடும் இல்ல’ எனக்கூறி அந்த பர்னீச்சரை உடைத்துவிட்டார். இருந்துமே கூட Sk vs VJs என்பது சினிமா ரசிகர்களிடம் புகைந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படியான ஒரு சரித்திர போட்டியில் காலமும் சொல்லாமல், ரசிகர்களும் விரும்பாமல் வாண்டடாக வந்து வண்டியில் ஏறியவர் தான் அருண் விஜய். ஏறக்குறைய விஜய்-அஜித் காலம் தொட்டே தமிழ் சினிமாவில் களமாடி வருபவர் அருண் விஜய். 1995 தொடங்கி பல படங்களை நடித்திருந்தாலும் ஒரு சில படங்களை தவிர மற்றவை பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இருந்தும் விட முயற்சியுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. சிறிய இடைவேளைக்கு பிறகு கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டராக நடித்து வெற்றி பெற்று தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ தொடங்கினார்.

இப்படியிருக்க, 90s கிட்ஸ்கள் காதல்- கல்யாண விவகாரத்தில் சம்மந்தமே இல்லாம 2k(2000s)கிட்ஸ்களுடன் ‘ஸ்பேரிங்’ போடுவது போல சிவகார்த்திகேயனுடன் ‘ஸ்பேரிங்’ போட்டார் அருண் விஜய். சிவாவின் சீமராஜா வெளியான சமயத்தில், ‘இப்பெல்லாம் யாருதான் மாஸ் பண்றதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சி, உண்மையான டேலண்ட் யாருன்னு தமிழ் ஆடியன்ஸுக்கு தெரியும்’ என்ற வன்மமான ஒரு ட்வீட் அருண் விஜய் ட்விட்டர் கணக்கில் வந்து விழுந்தது. உடனே கமெண்டில் கழுவி ஊற்ற தொடங்கிய இணையவாசிகள், ‘தமிழ் ஆடியன்ஸான நாங்க சொல்றோம்! சிவாகிட்ட தான் அந்த உண்மையான டேலண்ட் இருக்கு. அப்பா மூலமா சினிமாவுக்கு வந்த உங்களுக்குதான் டேலண்ட் எல்லாம் ஒன்னும் இல்ல ப்ரதர் எல்லாம் கிருப கிருப கிருப கிருப’ என பிளு பிளுவென பிடிக்க தொடங்கினர். கலகலப்புவில் சந்தானம் தன் மாமாவை பார்த்து, ‘இவருக்கு வயசுக்கேத்த சவகாசமே இல்ல’ என்பர். அந்த டைலாகை பகிர்ந்து அருண் விஜயை கலாய்க்க தொடங்கினர்.

அடுத்த சிறிது நேரத்திலேயே அருண்விஜய் ட்விட்டரில் இன்னொரு ட்வீட்டும் வந்து விழுந்தது. அதில், ‘oh my god (நம்ம மைண்டு வேற அங்க போகுதே!) யாரோ என்னோட அக்கவுண்ட ஹாக் பண்ணிட்டாங்க. இப்போதான் மறுபடி திரும்ப எடுத்தேன். எதுனா தப்பா ட்வீட் வந்தா தவிர்த்துடங்க’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘இதெல்லாம் பீச்ல உக்காந்து பொறி சாப்பிடுறவங்க கிட்ட சொல்லுங்க ப்ரோ. சிவாமேல உங்களுக்கு இருக்க வன்மம் பச்சையா தெரிது. உங்க கூட சினிமாவுக்கு வந்தவங்கலாம் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிட்டாங்க. நீங்க என்னன்னா அடுத்த தலைமுறை நடிகர்கள் கூட ஸ்பேரிங் போட்டுன்னு இருக்கீங்க ’ போன்ற கமெண்டுகளால் அருண் விஜய-ஐ ட்விட்டர் வாசிகள் வருத்தெடுக்க தொடங்கினர். சிவ கார்த்திகேயனும் தன்னுடைய அடுத்த படமான mr.local-இல் அருண் விஜய்க்கு கவுண்டர் கொடுப்பது போலவே ஒரு காமெடி சீனை சொருகியிருதார். கீழே இணைக்கப்பட்டு உள்ள வீடியோவில் 0:50 முதல் அந்த கவுண்டரை கண்டுகளிக்கலாம்.

இந்நிலையில் Mr.Local படத்தின் வெளியீட்டின் போதும் வாயை பொத்திய நிலையில் இருக்கும் ஒரு emoji-ஐ மட்டும் ட்விட்டரில் பகிர்ந்தார். Mr.Local நெகடிவ் விமர்சனங்களை வாரிக்குவித்த நிலையில் அதை கலாய்க்கும் வகையில் இது போடப்பட்டதாகவே புரிந்துகொள்ள பட்டது. அதன் பிறகுதான் அருண் விஜயின் மாஃபியா எனும் மகா காவியம் ஒன்று வெளியானது என்று குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நாமும் அந்த வாயை பொத்தும் Emoji-ஐ பயன்படுத்திக்கொள்வோம்.

இந்த சம்பவங்களுக்கிடையில் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் ஷங்கருடன் சிவகார்த்திகேயன் வாஞ்சயாக பேசும் போது அருகில் இருந்த அருண் விஜய் மிகவும் இருக்கமாக காணப்பட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் மீம் மெட்டீரியலாக மாறியது. இருவருக்குள்ளும் எந்த முன் விரோதமும் இல்லாத சூழலில் ஏன் இந்த வன்மம் என சினிமா ரசிகர்கள் குழம்பிப்போனார்கள். பல ஆண்டுகளாக சினிமாவில் போராடிவரும் தனக்கு கிடைக்காத ஆங்கிகாரம் சிவகார்த்திகேயனுக்கு கிடைப்பதால் ஏற்படும் பொறாமையாக இருக்கலாம் என்று ஒரு சாராரும், தனக்கு ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் இருந்தாலும் சினிமாவில் தானும் உச்சம் தொடலாம் என்றே அருண்விஜய் அப்படி செய்கிறார் என்று இன்னொரு சாராரும் கணித்து வருகின்றனர்.

இதேபோல் தயாரிப்பாளர் அன்புசெழியன் மகள் திருமணவிழாவில் சிவகார்த்திகேயனும், அருண்விஜயும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. ரசிகர்கள் மற்றும் நிருபர்களின் புடைசூழ சிவகார்த்திகேயன் மணமக்களை வாழ்த்திவிட்டு திரும்ப , அவருக்கு எதிரே வந்த அருண் விஜய் ஒதுங்கி செல்லும் காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார் சிவா. அருண்விஜய் தன்னுடைய மகன் ‘அர்னாவ்’ பிறந்தநாளுக்கு ஒரு ட்வீட்டை பதிவு செய்து உங்களின் வாழ்த்துக்களும் வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த சிவகார்த்திகேயன், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தில் உன்னுடைய நடிப்பை கண்டு ரசித்தேன்! உன்னுடைய படிப்பிலும் நடிப்பிலும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதை ரீட்வீட் செய்த அருண் விஜய், ‘உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே! நிச்சயம் அர்னாவிடம் இதை தெரிவிக்கிறேன்.’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுதினார். இந்நிலையில்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

எனும் குரலை மேற்கோள்காட்டி சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், பொறாமை கூட தவிர்க்க முடியாததுதான். ஆனால் எந்த அடிப்படை தர்க்கமும் இல்லாமல் ஏன் ஒருவரின் வளர்ச்சியை கண்டு கோபமடைய வேண்டும் எனவும் சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒரு பங்கேற்பாளராக தொடங்கி, தொகுப்பாளர், நட்சத்திர தொகுப்பாளர், நகைச்சுவை நடிகர், நட்சத்திர நடிகர் என்ற சிவாவின் படிப்படியான வளர்ச்சியில் 15 ஆண்டுகால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அவமானம் என பல உள்ளடங்கியுள்ளது. சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என கிளம்பும் பலருக்கும் சிவ கார்த்திகேயன் ஒரு இன்ஸ்பிரேஷனாக உள்ளார். ஆக, அவருக்கு மாஸ் பண்ண தகுதி இல்லையென்றால் இங்கே வேறு யாருக்குத்தான் அந்த தகுதி உள்ளது என்கிற கேள்விகள் இன்றும் அப்படியேதான் இருக்கிறது!. இருந்தும் வன்மம் தவிர்த்து அன்பை விதைப்போம் எனும் கருத்தே சிவகார்த்திகேயனிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆவோ பாய் தோஸ்த்தா ஆயேகா ஆயேகா..! Bad Vibe-uh ஜல்தி ஜாயேகா ஜாயேகா!

Advertisement:
SHARE

Related posts

“அதிமுக ஆட்சியில் 5 மடங்கு கூடுதல் கடன்” – ஸ்டாலின் விமர்சனம்

Saravana Kumar

வெளியானது PUBG-ன் 2.0 “Battleground”

Saravana Kumar

“ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா

Jeba Arul Robinson