முக்கியச் செய்திகள் உலகம்

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முடிவு? தலைமை அதிகாரிகள் பணிநீக்கம்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு விலை நிலவரப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய நிலவரப்படி மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டிவிட்டரை வாங்குவதற்கு அந்த ஊடக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அவை ஒப்பந்தமானது. அதற்கு முன்னதாக டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாராராக இருந்தார். இந்நிலையில், திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த ஜூலை 10-ம் தேதி அறிவித்தார்.

பின்னர், டிவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்று எலான் மஸ்க் கூறினார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டிவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி(சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டிவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டிவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார்.

ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டிவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் இனி அங்கே திரும்பமாட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த முழுவிவரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஓடிடியில் வெளியாகும் விக்ரம்!

Vel Prasanth

சூதாட்டத்திற்கு துணைபோகும் ஆட்சியாக திமுக உள்ளது- எடப்பாடி பழனிசாமி

G SaravanaKumar

’எனது கடைசி டி-20 போட்டி சென்னையில்தான்…’-பாராட்டு விழாவில் ’தல’ தோனி நச்!

Halley Karthik