முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

நடை வேகத்தை 250% அதிகரிக்கும்… ‘உலகின் அதிவேக காலணிகள்’ !!!

அமெரிக்காவில் 250 சதவீதம் அளவுக்கு அதிவேகமாக நடக்க உதவும் மூன்வாக்கர்ஸ் என்ற காலணிகளை ரோபோடிக்ஸ் என்ற பொறியாளர்கள் குழு தயாரித்துள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ரோபோடிக்ஸ் என்ற பொறியாளர்கள் குழு ஒன்று மூன் வாக்கர்ஸ் என்ற காலணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற காலணிகளை போன்று சாதாரண காலணிகள் அல்ல. இது நடையின் வேகத்தை 250% அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த காலணிகள் என்பது ஒரு சக்கரங்கள் அமைப்பை கொண்டது. இதை எந்த வகை காலணியிலும் அணிய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சக்கரங்களை காலணிகளில் பொருத்திவிட்டு நடக்கும் போது நமது வேகம் அதிகரிக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் நமது கால்களின் வேகத்தை கணித்து கொண்டு அதற்கேற்றாற்போல் சீரான வேகத்தை அளிக்கும். அதிகபட்சமாக இந்த மூன்வாக்கர்ஸை பயன்படுத்தி நடக்கும் போது நமது வேகம் சராசரி வேகத்தை விட 250% அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறத.

இந்த காலணியில் உள்ள சக்கரங்களில் 300 வாட் மின்சார மோட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் சுமார் 10 கி.மீ. தூரம் செல்லும் வரை தாக்குபிடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த வகை காலணிகள் உலகின் அதிவேகமான காலணிகள் என்று கூறப்படுகிறது.

இந்த சக்கரங்களை பொருத்தி கொண்டு படிக்கட்டு ஏறும்போது லாக் முறையை (Lock Method) பயன்படுத்தி அனைத்து சக்கரங்களையும் லாக் செய்கிறது. இதனால் படிக்கட்டுகளில் நாம் எப்போதும் போல ஏற முடிகிறது. மூன்வாக்கர்ஸின் விலை 1000 டாலர்கள் ஆகும். ஆனால் எதிர்காலத்தில் 1400 டாலர்களாக இது அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்

Web Editor

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Halley Karthik

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவனை ’கொன்ற’மனைவி: இறந்தவர் உயிருடன் வந்ததால் ’திடுக்’

Halley Karthik