‘மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும்’

மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப்பேரவையில் வனத்துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம்…

மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வனத்துறையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும் என்றும் அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘நீட் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள்’

முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை – ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும் என்றும், திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் குறிப்பிட்ட அவர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வனப்பகுதிகளில் உள்ள அந்நிய களைத்தாவர இனங்கள் அகற்றப்படும் என தெரிவித்த அவர் மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.