பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி; பரிசு கோப்பையை வென்றது ஹரியானா

திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில், ஹரியானா அணி பரிசு கோப்பையை வென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் தேசிய அளவில், மாநிலங்களுக்கிடையே பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது.…

திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில், ஹரியானா அணி பரிசு கோப்பையை வென்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் தேசிய அளவில், மாநிலங்களுக்கிடையே பெண்களுக்கான கபடி போட்டி நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடக்கி வைத்தார். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, கேரளா உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி ஆட்டத்தில் ஹரியானா, டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா அணியும், டெல்லி அணியும் 29-க்கு 29 புள்ளிகள் எடுத்து சமநிலையை எட்டியதால் டைபிரேக் முறை கடைபிடிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘நிலத்தகராறில் தாய் – மகன் கடப்பாரையால் குத்திக் கொலை’

இதில் ஹரியானா அணி, டெல்லி அணியை 5-க்கு 3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கண்டு முதல் பரிசான 2 இலட்ச ரூபாயையும், கோப்பையையும் வென்றது. இரண்டாவதாக வந்த டெல்லி அணிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக கிடைத்தது. பரிசுத் தொகையையும், வெற்றிக் கோப்பைகளையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வீரர்களுக்கு வழங்கினார். இப்போட்டிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை கண்டு ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.