நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானம் முஸ்தாங் பகுதியில் கண்டறியப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு 22 பயணிகளுடன் காலை புறப்பட்ட விமானம் திடீரென காணாமல் போனது. இதனை தொடர்ந்து மாயமான விமானத்தை ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மணப்பதி ஹிமால் (MANAPATHI HIMAL) மலைப்பகுதியில் உள்ள லாம்ச்சி (LAMCHE) ஆற்றுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் ராணுவத்தினருக்கு தகவல் அளித்தனர். விமானியின் செல்போன் ஜிபிஎஸ் மூலம் விமானம் முஸ்தாங் மாவட்டத்தின் கோவாங் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. விமானம் விபத்துக்குள்ளான படத்தை முதல் முதலாக நேபாள ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட 22 பேர் பயணித்தனர். அவர்களின் நிலை என்ன என்று இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.